Search This Blog

Friday, June 12, 2015

கிரேசி மோஹன் திருவல்லிக்கேணி பெருமாள் & எனது வாழ்த்துரை:

கிரேசி மோஹன் திருவல்லிக்கேணி பெருமாள் கோவில் மஹா சம்ப்ரோக்ஷணத்தின்போது கேஷவின் ஓவியம் பார்த்து  எழுதிய வெண்பா:



கிரேசி மோஹனின் வெண்பா:


For the inimitable painting of Shri Keshav, Crazy Mohan's VeNbA.
"அல்லிக் குளக்கரையான், அர்ஜுனர்க்கு கீதையை,
சொல்லிக் களம்புகுத்தும் சாரதியின், -பள்ளிக்கு(கோயிலுக்கு),
கும்பா பிஷேகமின்று, கட்டாயக் காப்புண்டு,
நம்பாள் நரநார ணன்"....கிரேசி மோகன்....
Khaanthan Balakrishna Sastri's photo.

For the inimitable painting of Shri Keshav, Crazy Mohan's VeNbA.
"அல்லிக் குளக்கரையான், அர்ஜுனர்க்கு கீதையை,
சொல்லிக் களம்புகுத்தும் சாரதியின், -பள்ளிக்கு(கோயிலுக்கு),
கும்பா பிஷேகமின்று, கட்டாயக் காப்புண்டு,
நம்பாள் நரநார ணன்"....'வலம்புரி சங்கேந்தி, வாத்ஸல் யமாக,
களம்புகா பார்த்தனுக்கு கீதை -நலம்புரி,
அம்பாள் சகோதரர் அல்லியூர் ஆலயத்தில்,
கும்பா பிஷேகக் களிப்பு''.....கிரேசி மோகன்....
----------------------------------------------------------------------------------------------------------
''மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
வாழ்வோனை நெஞ்சே வணங்கு''....
பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வாழும் ''அழகிய சிங்கர்''....
--------------------------------------------------------------------------------------------------------
''பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலே
பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே
அழகிய சிங்கா அருள்''....
திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்....
----------------------------------------------------------------------
''வேதவல்லித் தாயே வினைதீர்க்கும் செங்கமலப்
பாதவல்லி பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி
ஏதமில்லா ஞானத்தை ஏதுமில்லா மோனத்தை
சாதகனென் சிந்தையில் சேர்...
(பொது)
------------------
''என்னத்தைக் கண்டேன்நான் உன்பித்தம் கொண்டதால்
கண்ணைத் திறந்துகேள் கார்முகிலே -உன்னொத்த
தெய்வமிங்(கு) இல்லையென்ற தற்பெருமை தேவையா
தொய்வுறுமுன் தற்பரமே தோன்று''....கிரேசி மோகன்....கிரேசி மோகன்....

எனது வாழ்த்துரை:
கிரேஸியே உன்னிடம் வெண்பா அருவிபோல்
ஈஸியாய் வருவதால் இனிமேல் - யோஸிக்க
எதுவுமில்லை உடனே டிராமாவை வெண்பாவில் 
புதுமையாய் செய்து முடி!!

No comments:

Post a Comment